வணக்கம்..! இந்த வலைத்தளத்தை உங்கள் பார்வைக்கு உலா விடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.!
ஆயிரமாயிரம்; வலைத்தளங்கள் இருக்கின்றன.இன்னும் ஒன்று எதற்கு..? என்று உங்கள் மனதில் கேள்வி தோன்றுகிறதா..? நல்லது.
மரித்துப்போனவைகளை சோதிப்பது காரணங்களை அறிய மட்டுமல்ல, கண்டுபிடிக்கப்படும் காரணங்களால் இனி மரணிப்பதும் நிகழக்கூடாது என்பதற்காகவும்தான்..அதுவே இந்த வலைத்தளத்தின் நோக்கம்.!
உலகின் மிகப் பெரிய ஜனநாயகநாடு இந்தியா என்பதில் நாம் பெருமை கொள்ளும் அதே சமயம் உலகின் மிகப்பெரிய ஊழல்கள் மலிந்த நாடு என்பதிலும் முதலிடம் பிடிக்க நம்நாடு வேகமாய் பயணிப்பது கவலையை அளிக்கிறது.
யாரையெல்லாம் நமது நாட்டின் காவலர்கள் என்று நம்பிääநம் விரல்களில் மையைத் தடவிக்கொள்கிறோமோ..அவர்களாலேயே நாம் வஞ்சிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.ஒவ்வொரு தேர்தலிலும் நாம் ஓட்டுப் போடுவது பணம் சம்பாதிக்கவரும் கூட்டணிக்கு ஒட்டுப்போடுவதாகத்தான் முடிகிறது.
அது மட்டுமின்றி தற்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக கட்டியிருந்த வேட்டியை கழட்டி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு கூட்டணித் தலைவர்.அல்லது தலைவி முன்பு வெட்கத்தை விட்டு சிலர் மண்டியிடுவதும்.தொகுதியை ஒதுக்கக்கோரி குத்தவைத்து உட்கார்ந்திருப்பதும் பொது எதிரியை அழிக்க மட்டும்தானா என்ற சந்தேகத்தையும் அளிக்கிறது.
ஒருநாட்டின் தலைவிதியை தீர்மானிப்பது அரசியலும் பொருளாதாரமும் என்பது நமக்கு தெரியும்.ஆனால் நம்நாட்டு அரசியல் வெறும் பொருளாதாரத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. இது இப்படியெனில் கல்வி,மருத்துவம், சமூகநீதி, மக்கள் வாழ்க்கைத்தரம்…இன்னும் பிற விஷயமெல்லாம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்று சொல்லிக் கொள்ள முடியவில்லை..!
அதற்காக..நாம் சும்மாவா இருப்பது..?.ஆளும் தகுதி நமக்கு இல்லாமலிருக்கலாம்.ஆள்பவர்களின் தகுதியை விமரிசிக்கக் கூடாதா..?.எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்ற செயல்பாட்டை நாம் எடுத்துக்காட்டக் கூடாதா.?குறை சொல்வது மட்டுமே நம்வேலையாகக் கொள்ளாமல் நிறைவான பாதையில் நடைபோட ஆக்கப் பூர்வமான வழிகளையும் கூறுவோம்.
கடமையிலிருந்து தவறுபவர்களை தட்டியும் கேட்போம்..
அதற்கான வாசலாகத்தான் இந்த வலைத்தளம்..உங்கள் பங்களிப்புடன் மேலும் இது சிறக்கட்டும். நாட்டில் நடக்கும் எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் சமூகத்தையோ தனிமனிதரையோ பாதிக்கிறது என்று உணர்ந்தால் அதற்கு நீங்கள் சொல்லும் கருத்துக்கள் தீர்வுக்கு அடிப்படையாக மாறட்டும்.
ஓட்டுப் போடும் விரல்கள்தான் மாற்றத்திற்கும் வழிகாட்டும்..தட்டுங்கள்.. உங்களுக்காக இந்த வலைதளம் திறந்தே இருக்கும்..!
எழுத்துக்கள் மட்டுமல்ல புகைப்படங்களும் வீடியோக்களையும் கூட நீங்கள் அனுப்பலாம்.தகுதிபெற்றவை தரமாக பதியப்படும்…
No comments:
Post a Comment