தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் மீண்டும் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதை, அவர்களது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் ஆரவாரமாக கை தட்டி வரவேற்கலாம். ஆனால், மாநில முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் நடுநிலையாளர்களை, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை இலவசங்கள், ரொம்பவே வேதனைப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள, 19 லட்சம் பரம ஏழைக் குடும்பங்களுக்கு, மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு, உறுத்தலாக உள்ளது. இந்த இலவச அரிசித் திட்ட அறிக்கையை முதல்வர் வாசித்ததும், கட்சிக்காரர்கள் அனைவரும், ஆர்ப்பரித்து, கைதட்டி வரவேற்றனர். தான் ஆறாவது முறையாக முதல்வராக வரப்போகும் நிலையிலும், தமிழகத்தில் 19 லட்சம் ஏழை, அதுவும் பரம ஏழைக் குடும்பங்கள் இருப்பது, ரத்தக் கண்ணீரை வர வழைக்கிறது என, அந்த அறிக்கையோடு சேர்த்து, முதல்வர் கூறியிருக்கலாம். பரம ஏழைக் குடும்பங்களுக்கு, வெறும் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா? அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே! இன்று, மாவட்டச் செயலர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக உள்ளது, முதல்வருக்கு தெரியாமல் இல்லை. பரம ஏழைக் கிராமங்களை, தலைக்கு ஐந்து கிராமங்கள் என தத்தெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பாடுபடுவோம் என அறிவித்திருந்தால், அவரது கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, மக்கள் அனைவருமே வரவேற்றிருப்பர். அதைவிடுத்து, 35 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்பது என்பது எல்லாம், "பரம ஏழைகளே... பரவிக் கொண்டே இருங்கள்' என்பது போல் உள்ளது. "ஏழைகளின் தோழன், பாட்டாளிகளின் பங்காளி' எனச் சொல்லி, கோடீஸ்வரர்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆளப்போகின்றனரோ... பாவம் ஏழைகள்!
-- நன்றி எம்.முகமது அனீஸ், ராமநாதபுரம் தினமலர் நாளிதழ் ---
//மாநில முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் நடுநிலையாளர்களை, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை இலவசங்கள், ரொம்பவே வேதனைப்படுத்தியுள்ளது//
ReplyDeleteஉண்மைதானுங்க.. மாநிலம் பின்னோக்கி செல்வதாக தோன்றுகிறது ...
இளிச்சவாயங்கள் இருக்கும் வரை இலவசம் தொடரும்...
ReplyDeleteகொஞ்சம் 'word verification ' நீக்கினால் நிறைய கருத்துரைகள் வர வாய்ப்பு இருக்கும்
ReplyDelete...!
ReplyDelete