ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகளின் அளவுக்கு மீறிய செலவுகள் முதல் தகிடுதத்தங்கள் அனைத்தையும் தடுக்க
தேர்தல்கமிஷன் முயற்சித்து வருகிறது.ஆனால் ஆகச்சிறந்த நம் அரசியல்வாதிகள் தேர்தல் கமிஷனுக்கு அல்வா கொடுக்கும் நடைமுறை புதுப்புது விதமாக அரங்கேற்றி வருகின்றனர்.
நடைபெறவுள்ள சட்டமன்றத்தேர்தலை நியாயமாக நடத்தி முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ள தேர்தல் கமிஷன் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் அவர்களின் செலவுக்கணக்குகள் ஆகிய அனைத்திற்கும் வரம்பு ஏற்படுத்தியுள்ளது.இத்தேர்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு வேட்பாளரும் தனது தொகுதிக்கான பிரச்சாரம் செய்தவகையில் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை அனுமதி வழங்கியுள்ளது.ஆனால் இலவசங்களைப் பெற்றும் ஓட்டுக்களுக்காக பணத்தைப் பெற்றும் பழகிப்போன நமது பெரும்பான்மையான வாக்காளர்களை இந்த 16 லட்ச ரூபாயைக் கொண்டு சமாளிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அதுவும் எதிர்க்கட்சிகளாக இருப்பவர்களுக்கே இது போதாது எனும்போது ஆளுங்கட்சியில் அமைச்சர்களாகவும் இருந்தவர்களுக்கு
இந்தத் தொகை எந்த மூலைக்கு.?.பிரச்சாரத்திறகு போகும்போதே ஐந்து கார்களுக்கு மேல் போகக்கூடாது என்று தேர்தல் கமிஷன் சொன்னபடி போனால் தங்கள் செல்வாக்கையும்,பந்தாவையும் காட்டமுடியாது.வாக்காளர்களைக் கவர முடியாது என்றே நம் அரசியல்வாதிகள் மனதில் ஊறிப்போயுள்ளது.அப்படியானால் இதற்கு மாற்றுவழியென்ன.?
இங்கேதான் நமது ஜனநாயகமும்,தேர்தல் கமிஷனும்,அரசியல்வாதிகளுக்கு கைகொடுக்கிறது.அதாவது ஒவ்வொரு வேட்பாளருக்கும் ரூ.16 லட்சம் செலவுத் தொகையாக அனுமதிக்கப்பட்டிருப்பதால்அமைச்சர்களாக ஆளுங்கட்சியில் இருந்தவர்கள் சிலரும்அமையப்போகும் ஆட்சியில் அமைச்சர்களாக ஆசைப்படுபவர்களும்தங்கள் பணபலம்படைபலத்திற்கேற்ப ஏராளமான சுயேட்சைகளை களம் இறக்கிவிடுகின்றனர்.
அவர்களின் பெயரில் வேட்புமனுக்கள் மட்டும் தாக்கல் செய்யப்பட்டால் போதும்அவர்களின் கணக்கில்ரூ.16 லட்சத்தை செலவிடமுடியும்.இதில் எத்தனை சுயேட்சைகளை வேண்டுமானாலும்களம் இறக்கலாம்.தலா ரூ.16 லட்சம் செலவிடலாம் என்பதுதான்தற்போது அரசியல்வாதிகள் கடைப்பிடித்து வரும் நூதனமான வழியாக இருக்கிறது.
சட்டப்படி என்பதால்தேர்தல் கமிஷனும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் வேடிக்கை மட்டும்தான் பார்க்கமுடியும்.அடுத்த தேர்தலில் சுயேட்சைகளை கட்டுப்படுத்த தேர்தல் கமிஷன் முடிவெடுத்தாலும்அதற்கும் ஒரு மாற்றுவழியைக் கண்டுபிடிக்க நம் அரசியல்வாதிகள் தயாரா இருப்பார்கள் என்பதே உண்மை.
No comments:
Post a Comment