Thursday, 31 March 2011

இளைஞர்களைக் கிறுக்காக்கும் கிரிக்கெட்.,


இன்று உலகஅளவில்,இளைஞர்களைக் கிறுக்கர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது கிரிக்கெட் என்ற விளையாட்டு.நமது நாட்டைப் பொறுத்தவரை இந்தியா-பாகிஸ்தான் மோதுகின்றபோது,இந்தியவீதிகளே வெறிச்சோடிப் போயிருக்கிறது.அரசு ஊழியர்கள்கூட,அன்று விடுமறை எடுத்துக் கொண்டு கிரிக்கைட்டை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு விளையாட்டு என்ற அளவில் மக்கள் ரசித்துவிட்டுப்போகட்டும்.நாம் அந்த ரசனையைக் குறை சொல்லவில்லை.
ஆனால்,இந்த கிரிக்கெட் விளையாட்டிற்குப் பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதையறிந்து கொள்ளவும் நம் இளைஞர்கள் முன்வரவேண்டும் என்பதும் நமது வேண்டுகோள்.



உலகஅளவில் வல்லரசுகளாகத் திகழும் இங்கிலாந்தைத் தவிர,அமெரிக்கா, ரஷ்யா,ஜப்பான்,சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கான அணியே கிடையாது.ஏனெனில் மனித உழைப்பையும்,நேரத்தையும் பெருமளவில் வெட்டியாகத் தொலைக்கும் இந்த விளையாட்டு என்பதால்,அந்த அரசுகள் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதில்லை.ஆனால் இங்கிலாந்து பிரபுக்களின் தேசம்.அவர்கள் உடலை வருத்தும் விளையாட்டு மட்டுமின்றி,எந்த செயலையும் செய்யமாட்டார்கள். அவர்களுக்கு கிரிக்கெட்தான் சரி,ஒரே இடத்தில் நின்றுகொண்டு டொக்கு வைக்க சவுகரியமாக இந்த விளையாட்டு  இருந்தது என்பதைவிட இதற்காகவே அவர்கள் கண்டுபிடித்த விளையாட்டுதான் இந்த கிரிக்கெட்.

அது போகட்டும்.., உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுக்களாக ஃபுட்பால்,ஹாக்கி,கபடி,பேட்மிண்டன்,டென்னிஸ் என ஏராளமான விளையாட்டுக்கள் இருந்தும் கிரிக்கெட்டிற்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம்.?.
ஏனெனில்.மற்ற விளையாட்டுக்கள் எல்லாமே,குறிப்பிட்ட கால அளவிற்குள் விளையாடப்படுபவை.அந்த விளையாட்டுக்களைத் தொடங்கிவிட்டால் அதில் இடைவெளியே பெரும்பாலும் இருக்காது. ஆனால்,கிரிக்கெட்டில் அப்படியில்லை.ஒவ்வொரு பந்துக்கும் ஒரு இடைவெளி.
ஓவர்,பேட்ஸ்மேன்,பௌலர்கள் மாறும்போதும்,ஃபீல்டர்கள் அடிவாங்கும்போதும்,பேட்ஸ்மேன் அவுட்டா,அவுட்டில்லையா.?,எல்.பி.டபிள்யூவா,இல்லையா.? வீசிய  பந்து வைடா,வைடில்லையா.? எனத்தீர்மானிக்கும்வரையும்,காத்திருக்கும் வரையும் கிடைக்கும் இடைவெளி..என இப்படி எத்தனையோ இடைவெளிகள்..
இந்த இடைவெளிகள்தான்,கிரிக்கெட் என்ற விளையாட்டினை உச்சத்திற்கு கொண்டு செல்லவைத்திருக்கிறது.இந்த இடைவெளிகளைத்தான் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கான விளம்பர நேரமாக,இந்தியநிறுவனங்கள் மட்டுமின்றி உலக அளவிலான பெரும் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன.
சற்றே இதனை ரிவர்சில் பார்த்தால்.தங்கள் விளம்பரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும்,அதனால் கிடைக்கும் வணிகத்தின் மூலம் பெறும் கோடிகளுக்காவும்தான்,கிரிக்கெட் என்ற விளையாட்டு நடத்தப்படுகிறது. இதற்காகவே கிரிக்கெட்டைப் பற்றி பெருமளவில் செய்திகள் பரப்பப்படுகின்றன. போட்டோக்களும்,வீரர்களின் புத்திசாலித்தனங்களும், விளையாடும் முறைகளைப் பற்றியும் பெருமளவில் மிகைப்படுத்தப்பட்டு, பெருமைப்படுத்தப்பட்டு செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இவை மட்டுமெ இந்நிறுவனங்கள் லாபம் பெறுவதற்கு போதுமானதல்ல.மேலும் தொடர்ந்து இதேபோன்று வருவாய் பெறுவதற்கு உத்தரவாதமும் இல்லை.எனவேதான் இந்த வணிகநிறுவனங்கள், புத்திசாலித்தனமாக,கிரிக்கெட் விளையாட்டை நமது தேசபக்தியோடு இணைத்துவிட்டது.ஏனெனில்,ஒருநாட்டில் வசிக்கும் மனிதன்,எதற்காவும் சிலவற்றை விட்டுக் கொடுப்பான்.ஆனால் தேசபக்தியை மட்டும் பிறநாடுகளுக்காக விட்டுக்கொடுக்கமாட்டான் என்பது இயல்பு.இதுதான்..,இதுவேதான்..,நமக்கு இருக்கும் இந்த உணர்ச்சியைத்தான் லாபம் பார்ப்பவர்கள் பயன்படுத்திக் கொண்டுவருகின்றனர்.
இதேபோன்ற லாபத்திற்காகவேதான்,இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பதவிகளைப்பிடிக்கவும் போட்டா போட்டியும்,சண்டையும்,வழக்குகளும் நடக்கின்றன. நேரடியாக நமக்குத் தெரியும்.
 இந் தவெளிப்படையான அம்சங்களைத் தவிர,இந்த கிரிக்கெட்டிற்குப் பின்னால் வேறொரு உலகமும் இருக்கிறது.இதில் மிகப்பெரிய தாதாக்களும்,அரசியல்வாதிகளும்..ஏன் அரசி நிர்வாகத்தில் இருக்கும் சிலரின் கைகள்கூட இருக்கிறது.அதுதான்,கிரிக்கெட் டீம்களின் மீது பணம் கட்டப்படும் பெட்டுகள் எனப்படும் சூதாட்டங்கள்..இதில் புரள்வது லட்சங்கள் அல்ல,பல லட்சம் கோடிகள்..,இவையனைத்தும் ஒரே நெட்வொர்க்காகவோ,அல்லது பல நெட்வெர்க்குகளாகவோ இணைந்துள்ளன.
அதுவும் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள,அணிகள் விளையாடும்போது,கட்டப்படும் தொகைகள் அதிகம்.ஒரு அணி ஜெயிக்கும் என்று கட்டப்படும் பணம் மிக அதிகம் என்றால்,அந்த அணியைத் தோற்கடிக்க வீரர்கள் முதல் இவ்விளையாட்டில் தொடர்புடைய அனைவருக்கும் கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்படுகிறது.தரப்படும் லஞ்சமே கோடிகளில் என்றால்..,கிடைக்கும் லாபம் குறித்து நீங்களே ஒரு முடிவிற்கு வரமுடியும்.
இப்போது புரிகிறதா..? கிரிக்கெட்டிற்கு என்று ஏன் இவ்வளவு மவுசு என்று..,

இதுதான் ... கிரிக்கெட் கமெண்ட் ....










Anonymous said...

கிரிக்கெட் இந்தியர்களின் மனநோய் போல ஆகிவிட்டது.. அதை தெரிந்தே இந்திய அரசு ஊக்குவிக்கிறது....(இந்திய அரசு என்பது பலநிறுவனங்களின் கூட்டமைப்பு தானே....) நீங்கள் ஒன்றை கவனிக்க தவறிவிட்டதாக எனக்குபடுகிறது... தமிழக மீனவர் எப்படி வேண்டுமானாலும் குண்டடிபட்டு சாகலாம்... ஆனால் கிரிக்கெட் விளையாடியவனுக்கும் பார்ப்பவனுக்கும் உள்ள பாதுகாப்பை கவனியுங்கள்... இதை விட கேனை கிறுக்கு நாட்டை நீங்கள் எங்கும் கண்டிருக்கமுடியாது...ஆனாலும் இந்தியா தோற்க்கூடாது... அதுவும் பாகிஸ்தானிடம்... பாகிஸ்தான் தோற்பதற்கு எதுவும் இல்லை.. எல்லாவற்றையும் அமெரிக்காவிடம் அடமானம் வைத்து தினமும் சலாம் போட்டு பல்லிளித்து பெரும்பாலான ஏழைகள் கொண்ட தேசம் அது.
         நமது இந்திய மீடியாக்கள் பாகிஸ்தானில் வீட்டுக்கு வீடு ஒரு கஸாப் இருப்பதாகவே ஒரு மாயை வைத்து கல்லா கட்டுகிறது...நீங்கள் அல்லது இங்கு வரும் வாசகர்களோ.. எவரெனும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய பாகிஸ்தான் பற்றிய இரண்டு கட்டுரைகளை வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்..
     மிக வறிய,முட்டாள்தனமான பாவப்பட்ட ஜீவன்களை நீங்கள் அறிவீர்கள்..இன்றைய நாளில் எதிர்காலமே கேள்விகுறியான தேசம் அது.. நாம் மொஹாலியில் சில ஆயிரம் கொண்ட பாகிஸ்தான பணக்காரர்களை.. அங்குள்ள பெருவாரியான ஏழை பாகிஸ்தானியர்களுக்கும்.. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வெறித்தனத்துக்கும் நுனியளவும் சம்பந்தமில்லை.

 நன்றி  http://ilavarasanr.blogspot.com/  லிருந்து ....





Wednesday, 30 March 2011

வேட்பாளரை அடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை! - சோ உதிர்த்த 'முத்து'



தனது வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததில் எந்தத் தவறும் இல்லை. மக்களைப் பொறுத்தவரை இது ஒரு மேட்டரே இல்லை, என்று கூறியுள்ளார் அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான சோ.

தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை, மக்கள் முன்னிலையில் சரமாரியாக விஜயகாந்த் அடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இதுதொடர்பாக விஜயகாந்துக்கெதிரான கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் பல கட்சித் தலைவர்களும். ஆனால் விஜயகாந்தோ, என் ஆளைத்தானே அடிச்சேன். உங்களுக்கென்ன வந்தது... என்கிட்ட அடிவாங்கினவன் மகாராஜனாய் வருவான், என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் கருத்து கேட்கப்பட்டது. விஜயகாந்தை போயஸ் தோட்டம் பக்கம் கொண்டு போய் சேர்த்ததில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால், சோ கருத்தையும் கேட்க ஆவலாக இருந்தனர் பத்திரிகையாளர்கள்.

இதுகுறித்து அவர் கருத்து கூறுகையில், "எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க", என்றார். 

இதைக் கேட்ட திமுக கூட்டணியினர், 'இதே தவறை திமுக தலைவர்கள் யாராவது செய்திருந்தால், சோ இதே கருத்தைத்தான் சொல்லியிருப்பாரா?' என்று திருப்பிக் கேட்கின்றனர். கேள்வி நியாயம்தானே!



" தனது வேட்பாளரையே விஜயகாந்த் அடித்ததெல்லாம் ஒரு மேட்டரேயில்லை-இது சோவின் கருத்து.!
அவ்வளவு ஈஸியாக இந்த மேட்டரை சோ.எடுத்துக் கொள்வது போலவேதான்
கூட்டணித்தலைவர்களை கேட்காமலே 160 இடங்களை தன்னிச்சையாகவே ஜெ.அறிவித்ததும் ஒரு மேட்டரேயில்லை..,

தாமஸ் நியமனம் குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என்று பிரதமர் சொன்னதும் ஒரு மேட்டரேயில்லை..

கலைஞர் மற்றும் ஜெயலலிதா அறிவித்த எதிர்கால லஞ்சமான இலவசத் திட்டங்கள் எல்லாம் ஒரு மேட்டரேயில்லை..,

எல்லாவற்றுக்கும் மேலாக..ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஒரு மேட்டரேயில்லை..

விடுங்க மக்களே..பேனா இருக்கிறவன் எழுதறான்..,வாயிருக்கிறவன் பேசுறான்..மப்பு ஏறுனவன் அடிக்கிறான்.பணம் கட்டி சீட்டு வாங்கினவன் அடி வாங்குகிறான். இதெல்லாம் ஒரு மேட்டரேயில்லை..,"
 

ஊழல் மலிந்த நாடுகள் பட்டியல் : இந்தியாவுக்கு 4வது இடம்



ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் 16 நாடுகளில் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது. ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிசினஸ் கன்சல்டன்சி நிறுவனமான பெர்க் ( பி.இ.ஆர்.சி.,) எடுத்த சர்வேயில் இது தெரிய வந்துள்ளது. கம்போடியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் முறையே முதல் 3 இடங்களில் இருக்கின்றன. சீனா 12 வது இடத்தில் இருக்கிறது.



ஏப்ரல் 2ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை-கனிமொழியும் சேர்க்கப்படுவார்?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது ஏப்ரல் 2ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் குற்றப்பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் சேர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது.



ராசா மீது ஊழல் வழக்கு, அன்னியச் செலாவணி குற்றச்சாட்டு, ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக சிபிஐ ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை இம்மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம்  கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும், அதற்கு மேலும் 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரடங்கிய பெஞ்ச், சிபிஐ மனுவை விசாரித்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகை 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளது. இதை தயாரித்து வருவதாகவும், இதற்கு மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில் மிகப் பெரும் அளவுக்கு அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட மீறல் நடந்திருப்பதாகவும், பினாமி பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. சிபிஐ அளித்துள்ள ஆவணத்திலிருந்து இது புலனாகிறது. எனவே மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிப்பதாக நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு தொடர்பாக திரட்டப்பட்ட அனைத்து தகவல்களையும் அமலாக்கப் பிரிவு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அமலாக்கப் பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விவர அறிக்கையின்படி இந்த வழக்கில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பல தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டு பணம்  முதலீடு  செய்யப்பட்டுள்ளது. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ. ராசா இருந்த காலத்தில் இத்தகைய பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்திடமிருந்து ரூ. 106.95 கோடி பெறப்பட்டுள்ளது. ஒரே ஒரு பங்குத் தொகைக்காக இந்த அளவு தொகை பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை சந்தையில் வெறும் ரூ. 270 ஆக இருந்தபோது இந்த அளவுக்கு பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்று அமலாக்கப் பிரிவு தெரிவித்திருந்தது.

அன்னியச் செலாவணி பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தை மீறிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளதாகவும் இது தொடர்பாக விரிவான குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அது தெரிவித்திருந்தது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்ட பல்வேறு முதலீடுகள் விவரத்தையும் நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு அளித்துள்ளது. இந்த முதலீடுகளில் பெருமளவு வெளிநாடுகளில் இருந்து வந்தவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

நிறுவனங்கள் லைசென்ஸ் பெற்ற பிறகு வெளிநாடுகளில் இருந்து இவை வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவுகள் அடங்கிய குழு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இக்குழு மோரீஷசிலிருந்து பணம் வந்த பல்வேறு நாடுகளுக்கும் செல்லும்.

இதேபோல நீரா ராடியா பல்வேறு தரப்பினருடன் தொலைபேசியில் பேசிய உரையாடல் பதிவுகள் எழுத்து வடிவில் மாற்றப்பட்டு அளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்தது.

கனிமொழிக்கு ஆபத்து:

இந்த நிலையில் நேற்று ஸ்வான் நிறுவன அதிபர் ஷாஹித் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா மற்றும் நெருங்கிய நண்பர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பல்வாவின் ஸ்வான் நிறுவனம் கலைஞர் டிவிக்கு கடன் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதனால் கனிமொழிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த இருவரும்தான் கலைஞர் டிவிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முக்கிமயாக செயல்பட்டவர்கள் என்றும் சிபிஐ கூறியுள்ளது. இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் கனிமொழியிடம் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்தக் கூடிய வாய்ப்புகளும் உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 

சிறப்பு நீதிபதி நியமனம்:

இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பிரகாஷ் சைனி நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் யோசனைப்படி இந்த தனி நீதிமன்றம் அமைக்கப்படுகிறது.

Tuesday, 29 March 2011

பில்டிங் ஸ்ட்ராங்.பேஸ்மெண்ட்;..? ஸ்ட்ராங்.பேஸ்மெண்ட்;..?


தனது சொந்தக்கட்சி வேட்பாளரையேப் போட்டுத்தாக்கும் தலைவரான விஜயகாந்த்,எப்படா இவன் சிக்குவான் என்று காத்திருக்கும் வடிவேலு..,
பொதுமக்கள் முன்னிலையில் நடிகர்கள் நடத்தும்,இந்த நாடகங்களைப் பார்க்கும்போது,அரசியல் நாகரீகம் என்பது எந்த அளவிற்கு தரம் கெட்டுப்போயுள்ளது என்பதற்கு உதாரணமாகவே தெரிகிறது.என்ன செய்வது,பெரும்பான்மையான மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் ஜனநாயகத்தின் பில்டிங் என்னவோ ஸ்ட்ராங்தான்,ஆனால் பேஸ்மெண்ட் வீக்காக இருக்கிறதே..?

'தண்ணிய போட்டு உளறிட்டு வேட்பாளரை அடிக்கிற'-விஜயகாந்த் மீது வடிவேலு தாக்கு!

 சொந்த கட்சி வேட்பாளரையே தாக்கும் விஜயகாந்த்  ஒரு தலைவரா என்று நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பினார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதை அந்த வேட்பாளர் திருத்தியதால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்து உதைத்தார்.





இந்நிலையில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அமைச்சர்  தா.மோ.அன்பரசனை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய வடிவேலு,

தர்புரியில விஜயகாந்த் கட்சி வேட்பாளர் பேரு பாஸ்கர். பாஸ்கர் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக, வேட்பாளர் பாண்டியன் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். எத்தனாவது 'ரவுண்டில்' அவர் இருந்தார் என்று தெரியவில்லை.

உடனே கூட இருந்த அந்த வேட்பாளர், அண்ணே, என் பேரு பாண்டியன் இல்லைன்ணே, பாஸ்கர் என்று கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான அந்த டம்மி பீஸூ (விஜய்காந்த்) ஆயிரக்கணக்கான ஜனங்க கூடியிருக்க, அவுங்க முன்னாடியே அந்த வேட்பாளரை அடிச்சு உதைக்குது. நீ தண்ணிய போட்டு உளறியிருக்க. வேட்பாளர் தன்னுடைய பெயரை எடுத்துச் சொல்றாரு. அதுக்கு கோபம் வந்திருச்சு, போட்டு அடிக்கிற.

அடிச்ச அடியில அந்த வேட்பாளரின் ரெண்டு பல்லு விழுந்திருச்சி. வெளியே துப்புனா அசிங்கம்னு அதை அப்படியே வேட்பாளர் முழுங்கிட்டாரு.

ஓபனிங் எல்லாம் இவனுக்கிட்ட நல்லதான் இருக்கு. பினிசிங் சரியில்லையே. கருப்பு எம்ஜிஆருக்கு எப்படின்னா பில்டிங் ஸ்டார்ங்கு. ஆனால் பேஸ் மட்டம் வீக்.

தவறை சுட்டிக்காட்டிதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவன் எல்லாம் தலைவனா, இவர் பெரிய பெரிய பொறுப்புகளுக்கு ஆசைப்படலாமா என்றார்.

கக்கூஸ் போற அவசரமா?:

முன்னதாக சென்னை தாம்பரத்தில் பிரச்சாரம் செய்த வடிவேலு, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு லூசு வந்திருக்கு. அது என்ன சொல்லுது. நாடு சரியில்ல... ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு, நான் நாட்டு மக்களுக்கு விடுதலை வாங்கித் தரப்போறேன்னு சொல்லுது.

என்ன இப்ப வெள்ளைக்காரன் பிரிட்டிஷ் ஆட்சியா நடந்துக்கிட்டிருக்கு. நீ விடுதலை வாங்கித் தர்றதுக்கு. அந்த லூஸூ முதல்ல என்ன சொல்லுச்சு. நான் மக்களோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. தெயவத்தோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு.

இப்ப நீ எங்க போய் கூட்டணி சேர்ந்திருக்க. சீட்டுக்காக போய் சேர்ந்திருக்க. அது சீட்டுக்காக சேர்ந்த அணி அல்ல. சீட்டிங் அணி. காசு  வாங்கிட்டு போய் சேர்ந்திருக்க நீ, பிளடி ஃபூல். 

யார ஏமாத்துற நீ, மொதல்ல என்ன சொன்ன நீ. 30,40க்கு போறதெல்லாம் எலும்பு பொறுக்குற நாய். அது நான் இல்லன்னு சொன்னீல்ல. இப்ப 41 எலும்பு துண்டு வாங்கியிருக்க. அதுக்கு பேரு என்ன?, நீதான சொன்ன. 30,40 வாங்குறதுக்கு நான் நாயில்லன்னு. 

கூட்டணி ஏன் சேர்ந்தீங்கன்னு பத்திரிக்கைகாரங்க கேட்குறாங்க. அதுக்கு நீ என்ன சொல்லுற. இப்ப கூட்டணி சேரனுங்குறது அவசரம்னு சொல்லுற. என்ன கக்கூஸ் போற அவசரமா?.

அதிமுகவை கைப்பற்ற விஜயகாந்த் திட்டம்:

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் கருணாநிதி  யின் நல்லாட்சி தொடர திமுகவிற்கு வாக்குகேட்டு உங்களிடம் வந்திருக்கிறேன்.

ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளவர் நம் முதல்வர் கருணாநிதி. ஏழை மக்களுக்கு இலவசம் கொடுத்தால் ஒருவர் திட்டுகிறார், தடுக்க நினைக்கிறார். ஏனென்றால் அவருக்கு ஏழைகள் மீது அக்கறையே கிடையாது.

சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் அரசியலுக்கு வந்துள்ளார். நான் இன்னும் சினிமாவில் ஓடும் குதிரை. கருணாநிதி ஆட்சியில் ஏழைகள் நன்மை அடைவதால் அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக ஏழை மக்களை சந்தித்து ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பவர், அந்தம்மாவை முதல்வர் ஆக்குங்கள் என்று இதுவரை எங்காவது பேசியிருக்கிறாரா? முதல்வராகும் ஆசையுள்ள அவர் அதிமுகவை கைப்பற்றுவார் என்று தகவல் கிடைத்துள்ளது. ஏழைகளைப் பற்றி நினைக்காதவரை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்து அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதி சொன்னால் நிச்சயம் வரும். ஆனால் அவர்கள் சொன்னால் வரும் ஆனால் வராது. இது மக்களுக்கே நன்றாகத் தெரியும். கருணாநிதியை திட்டுபவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார்.

'அண்ணே, என் பேரு பாண்டி இல்லை'!..தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்!!





வழக்கமாகவே நிதானம் இழந்த நிலையிலேயே காணப்படுபவர் தேமுதிக தலைவர் விஜய்காந்த் ,இதனால் தான் அவரை குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக அவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே குற்றம் சாட்டினார்.

இந் நிலையில் நேற்று தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்த விஜய்காந்த், அவரை 'கும் கும்' என்று குத்தினார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர்விஜயகாந்த்,திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர், அண்ணே என் பேரு பாண்டியன் இல்லைன்னே.. பாஸ்கர் என்று திருத்தினார்.இதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கும்படி மைக்கில் சத்தமாகவே பாஸ்கர் சொல்லிவிட, உடனே நிதானம் இழந்தார் விஜய்காந்த்.

ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். அவை வேனுக்குள் தள்ளி முகத்திலும் முதுகிலும் குத்து குத்து என்று குத்தியதோடு, சரமாரியாக அறைந்தார்.
      இதையடுத்து அந்த வேட்பாளர் வேனுக்குள்ளேயே பம்மியபடி, கைகளால் விஜய்காந்தின் அடிகளை தடுத்தார். ஆனாலும் விஜய்காந்த் முகத்தைத் தேடித் தேடி அவரைக் குத்திவிட்டு, அந்த இடத்தைக் காலி செய்தார்.விஜயகாந்த்தின் இந்த கேவலமான செயல் அப் பகுதியில் நின்றிருந்த மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.

Monday, 28 March 2011

தா.பாண்டியனுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சம்: புகார் தெரிவித்தவர் கட்சியில் இருந்து நீக்கம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி தொகுதியின் இ.கம்யூ., வேட்பாளர், தா. பாண்டியனுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை சுமத்திய மாவட்டக்குழு செயலர் நாகராஜரெட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக்குழுவிற்கு செயலாளராக இருந்து வந்த நாகராஜரெட்டி, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கு தளி தொகுதியை ஒதுக்கவில்லை என்பதால், கட்சி மாறி தி.மு.க.வில் சேர்ந்துவிட்டதாக நேரில் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்து, கட்சிக்கு எதிராக பகிரங்கமாகச் செயல்பட்டுள்ளார். எனவே இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பட்டியலில் இருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டு விட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தளி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரிடம் தமிழ் மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கியதாகவும் நாகராஜரெட்டி குற்றம் சாட்டி இருப்பதால் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவற்கான கடிதம் அவருக்கு முன் அறிவிப்பாக அனுப்பி வைக்கப்படுகிறது. கம்யூனிஸ்டு கட்சி தோழர்களும், பொது மக்களும், நாகராஜ ரெட்டியின் அவதூறு பிரசாரத்தை புறக்கணித்து, தேர்தல் பணிகளில் குழப்பத்திற்கு இடம் தராது தொடர்ந்து பணியாற்ற வேண்டுகிறேன்.இவ்வாறு தா. பாண்டியன் க;றியுள்ளார்.


ஓசூரில் இருந்து வந்த முதல்கட்ட செய்தி: ஓட்டுக்குத்தான் காசு கொடுப்பார்கள், வேலை வாங்க காசு கொடுப்பார்கள், இங்கே வேட்பாளரே ஒருவர் கட்சி நிர்வாகிக்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக கொடுத்து தேர்தலில் நிற்க சீட் வாங்கியிருக்கிறார் இந்திய கம்யூ., கட்சி எம்.எல்.ஏ., இதனால் அதிருப்பதியுற்ற இக்கட்சி பிரமுகர்கள் பலர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட தளி சட்டசபை தொகுதியில் 50 லட்சம் கொடுத்து "சீட்' வாங்கி வந்த "சிட்டிங்' எம்.எல்.ஏ., ராமச்சந்திரனை தோற்கடிக்க தி.மு.க., வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நாகராஜ் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.

நாகராஜ் ரெட்டி கோஷ்டியினரும், தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் கோஷ்டியினரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். கட்சி தலைமை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் நாகராஜ்ரெட்டி கோஷ்டியினர் கட்சி நடவடிக்கையில் இருந்து ஒரங்கட்டப்பட்டனர். நாகராஜ் ரெட்டி மற்றும் அவரது ஆதரவார்கள் ஆலோசனை கூட்டம் ஓசூரில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் நாகராஜ் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நான் தளியில் போட்டியிட்டேன். சி.பி.எம்., கட்சியில் இருந்த ராமச்சந்திரன் "சீட்' கிடைக்காத அதிருப்தியில் என்னை எதிர்த்து கூட்டணி தர்மத்தை மீறி போட்டியிட்டார். அதனால், நான் வெறும் 2,500 ஓட்டுகள் வித்யாசத்தில் தோல்வியடைந்தேன். கூட்டணி தர்மத்தை மீறிய குற்றத்திற்காக ராமச்சந்திரனை சி.பி.எம்., கட்சியை விட்டு வெளியேற்றியது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு துரோகம் செய்த ராமச்சந்திரனையும், அவரது மாமனார் லகுமையாவையும் எந்த பரிசீலனையும் செய்யாமல் மாநில செயலாளர் தா.பாண்டியனும், துணை செயலாளர் மகேந்திரனும் தன்னிச்சியாக முடிவு செய்து கட்சியில் சேர்த்தனர். இது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பத்து "சீட்'களையும் விற்று விட்டனர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை முத்து, கூடுமியான உள்ளிட்ட தியாக தலைவர்கள் ரத்தம் சிந்தி ஏராளமான இளைஞர்களை கட்சியில் சேர்த்து கட்சியை வளர்த்தனர். தற்போது இந்த கட்சியை பண பலத்தை பயன்படுத்தி ராமச்சந்திரனும், லகுமையாவும் ஆக்கிரமித்து விட்டனர். இதனால், உண்மையான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழைய நிர்வாகிகள், தொண்டர்கள் மதிக்கப்படவில்லை. நல்லக்கண்ணு செயலாளராக இருந்தவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகம் இருந்தது. தா.பாண்டியனும், மகேந்திரனும் தங்களுடைய சுயநலத்திற்காக அ.தி.மு.க., கூட்டணியில் கிடைத்த பத்து "சீட்'களையும் விற்று விட்டனர்.

ராமச்சந்திரனை தோற்கடிக்க பிரசாரம்: தளி தொகுதியில் ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவிக்க கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு நடத்தவில்லை. தா.பாண்டியனும், மகேந்திரனும் 50 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவித்து விட்டனர். அதனால், இந்த தேர்தலில் ராமச்சந்திரனை தோற்கடிக்க அவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பிரகாஷை ஆதிரிக்க முடிவு செய்துள்ளோம். அவரை ஆதரித்து தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும், கம்யூனிஸ்ட் கொள்கை இல்லாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நீடிப்பதை விரும்பவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள 23 மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட 300 கிளைகளை கலைத்து கட்சியில் விலகி உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

   கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றில் மட்டும்தான் பிழைக்கத் தெரியாதவர்கள் அதிகம் என்று மற்ற கட்சியினரும் பொதுமக்களும் அபிப்ராயம் வைத்திருந்தனர். அதனையும் மீறி ‘‘இவன் ரொம்ப நல்லவன்டா’’ என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
முக்கியமாக எப்போதும் கம்யூனிஸ்ட்களை குறை சொல்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும் துக்ளக்-சோ.ராமசாமிகூட,இந்தியஅளவில் லஞ்சம் என்ற புதைசேற்றுக்குள் விழாதவர்களாக கம்யூனிஸ்ட்கள் மட்டுமே இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.ஆனால்,இப்போது கிளம்பியிருக்கும் பகீர்குற்றச்சாட்டு நடுநிலையாளர்களின் மனதை வேதனைப்படுத்தியிருக்கிறது.இக்குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்த இடம்கொடுக்காமல் நடந்து கொள்ளவும் கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
ஏனெனில், ‘‘ நாளை இந்த இடத்தில் ஒருபுல் முளைக்கும் என்றால்,அங்கு அது முளைப்பதற்குரிய காரணங்கள் ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு தெரிந்திருக்க வேண்டும்’’- இது தா.பாண்டியன் சொன்னது.
அதனை அவரே மறக்கலாமா.?


கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம்

சினிமா துறையை எனது வீட்டுத் துறையாக பங்கிட்டுக் கொள்வதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நானும் கலைத்துறையைச் சேர்ந்தவன்தான். எனது குடும்பம் கலைத்துறையில் இருக்கக்கூடாதா?, என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் என்ற நாவல் அதே பெயரில் படமாகி இருக்கிறது. கதை-திரைக்கதை வசனத்தை முதல்வர் கருணாநிதி எழுத, நடிகர் தியாகராஜன் இயக்கியுள்ளார். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.


இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை முதல்வர் கருணாநிதி வெளியிட, அதை தொழில் அதிபர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். 

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

எனக்கு இந்த நேரம் நாட்டில் என்ன வேலை என்றால் - எங்கேயாவது ஒரு ஊரில் மேடை அமைத்து - அந்த மேடையில் தி.மு.க. கூட்டணி கட்சியின் வேட்பாளர் யாரையாவது அறிமுகம் செய்து - அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிற பெரும் பணி. அந்தப் பணியை ஒத்தி வைத்து விட்டு இந்தப் பணிக்கு நான் வந்திருப்பதற்குக் காரணம் - இந்தப் பணியையும் நான் அந்தப் பணியைப் போலவே மதிப்பதுதான்.

திரைப்பட விழாக்களைத் தவிர்க்கிறேன்...

பொதுவாக இப்போதெல்லாம் திரைப்பட விழாக்கள் - திரைப்பட இசை கேசட் வெளியீட்டு விழாக்கள் - திரைப்படத் தொடக்க விழாக்கள் போன்ற விழாக்களில் கலந்து கொள்ள எனக்கு ஒரு வகையிலே அச்சம். ஏனென்றால் அந்த விழாவைத் தொடர்ந்து திரை உலகத்திலே இருக்கின்றவர்களே கூட, அதை விமர்சிக்கின்ற வகையில் அந்த நிகழ்ச்சியை விமர்சித்தால் கூட பரவாயில்லை - அதை வைத்து என்னையே விமர்சிக்கின்ற வகையில் நிலைமை ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் கூடுமான வரையில் அத்தகைய நிகழ்ச்சிகளை-ஆங்கிலத்திலே சொல்வார்களே avoid என்று- அப்படி தவிர்ப்பதை நான் மிகுந்த அக்கறையோடு கையாண்டு வருகிறேன்.

இன்றைக்கு நாம் மிகுந்த மகிழ்ச்சியடையக் கூடிய அளவிற்கு - இந்தப் படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள். ஒரேயொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் தியாகராஜனுடைய கைகளை எடுத்து முத்தமிட்டுக் கொள்ளலாம் - அந்த அளவிற்கு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரசாந்தின் கன்னத்தில் அந்த முத்தத்தைத் தரலாம் - அந்த அளவிற்கு தம்பி பிரசாந்த் இரு வேடங்களில் இதிலே நடித்திருக்கிறார்.

சினிமா துறையைவிட்டு...

இவைகளையெல்லாம் நான் பேசினால் இந்தப் படத்தினுடைய பாடல்களை - உரையாடல்களை - நடிப்பை - இசையை - இசையமைத்த நம்முடைய இசைஞானி அவர்களைப் பாராட்டினால் கருணாநிதி சினிமா உலகத்தை விட்டு என்றைக்கும் வெளியே வரமாட்டான் இந்தக் கருணாநிதி என்று எனக்கு ஜாதகம் கணிப்பார்கள். அது கணிக்கப்பட வேண்டிய ஜாதகம். அப்படித்தான் என்னுடைய ஜாதகம் கணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். 

சினிமா உலகத்தை விட்டு - திரைப்படத் துறையை விட்டு - எழுத்துத் துறையை விட்டு கருணாநிதி வெளியே வர மாட்டான் என்று சொல்வதை விட ஒரு சிலாக்கியமான, நல்ல மதிப்புரை வேறு யாரும் எனக்குத் தர இயலாது.

ஏனென்றால் நான் அரசியல்வாதியாக இருந்தாலுங்கூட, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கின்ற முதல்வராக இருந்தாலுங்கூட, என்னுடைய எண்ணம் எல்லாம், என்னுடைய ஆர்வம் எல்லாம் எழுத வேண்டும் - எழுத வேண்டும் - எழுத வேண்டும் என்பதிலேதான். எழுத்தை மறந்து விட்டு - இந்தக் கலைத் துறையை விட்டு - இலக்கியத் துறையை விட்டு விட்டு - அரசியல் துறையிலே மாத்திரம் நாட்டம் செலுத்த வேண்டுமென்றால் அது என்னால் இயலாத காரியம். 

எனவேதான் அரசியல் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற இந்த நேரத்திலே கூட கலைத்துறைக்குத் தர வேண்டிய மதிப்பை அளிப்பதற்காக அழைத்தவுடன் ஏற்றுக் கொண்டு இன்று உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

என் வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கா?

பொதுவாக நான் இந்த விழாவிலே இதையெல்லாம் பேசுவது சரிதானா என்பது எனக்கே கூட - என் உள்ளத்தின் அடித்தளத்திலே எழுகின்ற வினாவாக இருந்தாலுங்கூட, பேசித் தான் தீர வேண்டும் என்பதில் நான் கொஞ்சம் அழுத்தந் திருத்தமாக இருக்கிறேன். நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். 

ஒரு பெரியவர்(?) அரசியலிலே நானே கருதிக் கொள்கிறேன் - என்னை விட சிறந்தவராகவோ அல்லது என்னை விட திறமையானவராகவோ இருப்பவர் (?) என்று சிலரால் கருதப்படுபவர் - சொல்லியிருக்கிறார் - கருணாநிதி சினிமா துறையையும் தன்னுடைய வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கு போட்டுக் கொண்டு அதிலும் கொள்ளை அடிக்கிறார் என்று!

சினிமா துறையில் என்னுடைய மகன் முத்து நடித்தான். அதற்குப் பிறகு என்னுடைய இன்னொரு மகன் தமிழரசு ஒரு படத்தைத் தயாரித்தான், அடுத்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

ஆனால் நான் அந்த விமர்சகரைக் கேட்க விரும்புகிறேன். அந்த விமர்சகர் சொன்னதை வெளியிட்டு மகிழ்கின்ற பத்திரிகைக்காரர்களைக் கேட்க விரும்புகிறேன். என் குடும்பத்திலே மாத்திரம்தானா மூன்று நான்கு பேர் சினிமா துறையிலே இருக்கிரார்கள்? மன்னிக்க வேண்டும் - ஏ.வி.எம். குடும்பத்தினர்கள் - செட்டியார் யார், அவருடைய பிள்ளைகள் ஏ.வி.எம். சரவணன், இப்படி ஏ.வி.எம். ஏ.வி.எம். என்று பல பெயர்கள் பத்திரிகைகளிலே வருகிறது. பல பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன. 

நான் அதைக் குற்றமாகச் சொல்லவில்லை. ஏ.வி.எம். வீட்டுப் பிள்ளைகள் மூன்று பேர், நான்கு பேர், அவருடைய குடும்பத்தார் கலைத்துறையிலே இருக்கலாம், என்னுடைய வீட்டிலே உள்ளவர்கள் கலைத் துறையிலே ஏன் இருக்கக் கூடாது என்று எனக்கே தெரியவில்லை.

கலைக் குடும்பம் என்று நான் இந்தக் குடும்பத்தையே கலைக் குடும்பமாக நான் ஆக்கியிருக்கும்போது - இதிலே நான் மாத்திரம் என்ன - வைரமுத்து இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? ராமநாராயணன் இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? தம்பி பிரசாந்த் இருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? எல்லோரும் என்னுடைய குடும்பம்தான்.

கலைத்துறைக்கு விரோதியாக...

அதனால்தான் கடந்த ஐந்தாண்டு காலத்தில் என்னுடைய தலைமையிலே இயங்குகின்ற இந்த ஆட்சியில் - கடந்த காலத்தில் எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவிற்கு அவ்வளவு உதவிகள், அவ்வளவு சலுகைகள் திரைப்பட உலகத்திற்காகச் செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். 

இதற்கு முன்பெல்லாம் வெளிப்புறக் காட்சி ஒன்றை படமாக்க வேண்டு மென்று - ஒரு படத்தயாரிப்பாளர் நினைத்தால், ஏதோ ஒரு மண்டபம், ஏதோ ஒரு அரண்மனை முகப்பு தேவை என்று எண்ணினால் - ராஜாஜி மண்டபத்திலே உள்ள படிக்கட்டுகளையும், முகப்பையும் படம் எடுக்கவேண்டுமென்றால், ஒரு நாள் வாடகையாக ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டுமென்று இருந்தது. அதைக் குறைத்து ஐந்தாயிரம் ரூபாயாக ஆக்கியவன் கருணாநிதி. ஆனால் கலைத் துறைக்கு இன்றைக்கு நான் விரோதியாக ஒரு சிலரால் கருதப்படுகிறேன் என்பதுதான் வேடிக்கை, ஆச்சர்யம்.

எனக்கு குடும்பம் இருக்கிறதே...

தமிழ்நாட்டிலே தான் இன்றைக்கு கேளிக்கை வரி இல்லாமல் படங்களை வெளியிடலாம் என்ற அற்புதத்தைச் செய்திருக்கிறோம். ஆனால் இதற்கு எனக்கு தரப்படுகின்ற பரிசு என்ன தெரியுமா? நான் படம் எடுத்து - படத்தயாரிப்பாளர் களிடையே பெரிய அளவுக்கு நான்தான் மற்ற தயாரிப்பாளர்களை எல்லாம் கெடுக்கிறேன் - அவர்களுக்கெல்லாம் போட்டியாக என்னுடைய குடும்பம்தான் இருக்கிறது என்கிறார்கள். 

நானும் பார்க்கிறேன். எதற்கெடுத்தாலும் என்னுடைய குடும்பம், என்னுடைய குடும்பம் என்று இதுதான் அவர்கள் கண்ணிலே படுகிறது. என்ன செய்வது? எனக்கு குடும்பம் இருக்கிறதே? குடும்பத்தை நானே ஒழித்து விட முடியுமா? குடும்பம் இருப்பதால் அதிலே உள்ள பிள்ளைகள் - உறவினர்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள். 

இந்தத் துறைக்கு வருகிறவர்கள் எல்லாம் ஏதோ ஏகாதிபத்தியத்தை - ஏகபோகத்தை இந்தத் துறையிலே அனுபவிக்க வேண்டும் என்று என்னால் அனுப்பப்படுகிறவர்கள் என்று சொன்னால், அது நியாயமா? சரி தானா? என்பதை இந்தத் துறையிலே பணியாற்றுகின்ற நீங்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நிழலோடு போராட்டம்:

ஆனால், சில பேருக்கு - யாரும் போராடுவதற்கு எதிரே வராவிட்டால், நிழலோடுவாவது போராடுவார்கள். நிழலோடு போராடிப் போராடிப் பழக்கம். அவர்கள் இப்படி நிழலோடு போராடி, என்னை - முதலமைச்சராக இருக்கிற என்னை விமர்சித்தால்தான், அவர்கள் நடத்துகின்ற எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு - அவர்கள் எண்ணி இருக்கின்ற புதிய கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்று கருதி, இன்று தங்களுடைய நேரத்தைச் செலவிடுவது நல்லதல்ல; அவர்கள் என்னதான் என்னை அழிப்பதற்கு, எனக்குத் தோல்வியை தருவதற்குப் பாடுபட்டாலும்கூட, நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன் - அவர்களுடைய மேன்மைக்காக, அவர்களுடைய நன்மைக்காக, அவர்களுடைய வளர்ச்சிக்காகத்தான் நான் என்றைக்கும் பாடுபடுவேன் என்ற அந்த உறுதியை மாத்திரம் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

இசைஞானி இளையராஜா:

இந்த படத்திலே வரப்போகின்ற வெற்றிகளுக்கு என்னுடைய உரையாடல் மாத்திரம் காரணமாக இருக்க முடியாது; நான் எழுதிய திரைக்கதை மாத்திரம் காரணமாக இருக்க முடியாது. இதிலே இசையமைத்த என்னுடைய அருமைத்தம்பி இளையராஜாவை நான் பாராட்டாமல் இருக்க முடியாது. 

எந்தக் கதையை அவரிடத்திலே கொடுத்து, இசையமைக்க வேண்டுமேன்று கேட்டாலும், முதலில் கதையின் தரம் என்ன - கதையின் போக்கு என்ன - கதையின் கதாபாத்திரங்கள் யார் - கதை நடைபெறுகின்ற காலம் எது - என்பவைகளை எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப இசையமைக்கக்கூடிய ஆற்றல், தமிழ்நாட்டிலே ஒருவர், இருவருக்குத்தான் உண்டு. அவர்களிலே ஒருவர் நம்முடைய இசைஞானி இளையராஜா என்றால், அது மிகையாகாது. அவருக்கு "இசைஞானி'' என்ற பட்டத்தைக் கொடுத்ததும் நான்தான். 

நல்ல காலம் - பட்டம் பெற்று, இவ்வளவு நாளுக்குப் பிறகும், அவர் விரோதமாகாமல் இருக்கிறார். ஏனென்றால், பல பேர் - வைரமுத்து தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது - பல பேர் என்னிடத்திலே பட்டம் பெற்றவர்கள் எல்லாம், திரும்ப என்னை எதிர்க்கின்ற, பகைத்துக் கொள்கின்றவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். நான் அதற்காகப் பட்டத்தை திரும்ப வாங்கிடவா முடியும்? கொடுத்தது கொடுத்ததுதான்.

இந்தப் படம் மிக வெற்றிகரமாக ஓடக் கூடிய படம். பொன்னர், சங்கரைப் போன்ற பல புதினங்கள் - சரித்திரப் பிரசித்தி பெற்ற கதைகள் - நம்முடைய தமிழ்நாட்டினுடைய மக்களின் ஊக்கத்தை, வீரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தட்டும் என்கின்ற அந்த ஆசையை வெளியிட்டு நீங்கள் என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன், என்றார்.





 மதிப்பிற்குரிய முதல்வர் அய்யா அவர்களே..,
உங்கள் குடும்பம் கலைக்குடும்பமாக இருப்பது பற்றி,இங்கு யாருக்கும் எவ்வித வருத்தமும் இல்லை..ஆனால்,ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும்,உங்கள் குடும்பக்கலையாக மாற்றிக் கொண்டீர்களே என்றுதான்,சினிமாவை நம்பிப் பிழைத்துக் கொண்டிருந்த பலநூறு பேரின் குரலாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா.?
 


இதெல்லாம் ஒரு பொழப்பா?



காங்கிரஸாருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் கட்சியினருக்கும் பெரும் வியப்பூட்டும் வகையில் மயிலாப்பூர் தொகுதியில் ஒரு அரசியல் நாடகம் இன்று அரங்கேறியது. அங்கு காங்கிரஸ் வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த ஜெயந்தி தங்கபாலுவின் மனுவை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். அதேசமயம், அவரது டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனு ஏற்கப்பட்டு விட்டது. இதனால் அவர் வேட்பாளராகியுள்ளார்.

வரலாறு காணாத குழப்பத்தில் உள்ளது காங்கிரஸ். வேட்பாளர் தேர்வு தொடர்பாக பல தொகுதிகளிலும் போர் வெடித்துள்ளது. இதை அடக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போய் வாயடைத்து நிற்கிறது காங்கிரஸ் மேலிடம்.

தங்கபாலு செய்த பெரும் குழப்பத்தால் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெரும் கேள்விக்குறியாக்கி விட்டது காங்கிரஸ். இதனால் இத்தனை தொகுதிகளை காங்கிரஸுக்கு தேவையில்லாமல் அளித்துள்ள திமுக பெரும் கவலையிலும், கடுப்பிலும் உள்ளது.

இந்த நிலையில் தங்கபாலு அட்டகாசமான ஒரு ஸ்டண்ட்டை அடித்து அனைவரையும் மூக்கில் விரல் வைக்கச் செய்துள்ளார். 

இவரது மனைவி ஜெயந்திக்கு மயிலாப்பூரில் சீட் வாங்கிக் கொடுத்திருந்தார் தங்கபாலு. ஆனால் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜெயந்தி தோற்பது நிச்சயம் என்ற நிலை காணப்படுகிறது. மயிலை சிவகாமி என்பவர் போட்டி வேட்பாளராக களம் குதித்துள்ளார். இவருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸார் உள்பட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் களம் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அதிரடியாக சில வேலைகளை செய்தார் தங்கபாலு. ஒவ்வொரு அரசியல் கட்சி வேட்பாளருடனும் ஒரு டம்மி வேட்பாளர் அதாவது மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்வது வழக்கம்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு மாற்று வேட்பாளராக, அதாவது டம்மியாக தங்கபாலுவே மனு தாக்கல் செய்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது காங்கிரஸாரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தங்கபாலு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்திருப்பதாக அனைவரும் கூறினர்.

2 ஆவணங்களை இணைக்கவில்லை

தற்போது தங்கபாலுவின் திட்டம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இன்று நடந்த வேட்பு மனு பரிசீலனையின்போது ஜெயந்தியின் வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

வேட்பு மனுவுடன் முக்கியமான 2 ஆவணங்களை ஜெயந்தி தங்கபாலு தனது வேட்பு மனுவுடன் இணைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே அவரது மனு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போயிருச்சு-தங்கபாலு

ஆனால் அந்த இரண்டு ஆவணங்களும் வேட்பு மனுவுடன்தான் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது மாயமாகி விட்டது என்று தங்கபாலு புகார் கூறியுள்ளார். ஆனால் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள எதுவும் காணாமல் போக வாய்ப்பில்லை. ஜெயந்தி இணைக்கவில்லை, எனவேதான் நிராகரிக்கப்பட்டது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் தங்கபாலு கூறுவது பொய்யாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

நான்தான் வேட்பாளர்-தங்கபாலு அதிரடி

ஜெயந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போதிலும், தங்கபாலுவின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் வேட்பாளர் நான்தான் என்று தங்கபாலுவே அறிவித்துள்ளார்.

தங்கபாலுவின் இந்த அதிரடி செயலால் காங்கிரஸார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிகப் பெரிய டிராமாவை படு கேஷுவலாக தங்கபாலு அரங்கேற்றியுள்ளார் என்று அவரது அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் தங்கபாலுதான் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார். ஆனால் நேரடியாக களத்தில் குதித்தால் காங்கிரஸாரின் ஒட்டுமொத்த கொந்தளிப்புக்குள்ளாக நேரிடும் (சேலம் லோக்சபா தொகுதியில் போட்டி படுதோல்வி அடைந்தவர் தங்கபாலு என்பது நினைவிருக்கலாம்) என்பதால் நேரடியாக களத்தில் குதிக்காமல், மனைவியை வேட்பாளராக களம் இறக்கி, சத்தம் போடாமல் பின்னாடியே இவரும் டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்து இப்போது அவரே வேட்பாளராகி விட்டார் என்கிறார்கள் அதிருப்தி காங்கிரஸார்.

தங்கபாலுவின் இந்த அலேக் ஐடியாவால் தங்கபாலு எதிர்ப்புக் கோஷ்டியினர் மேலும் டென்ஷனாகியுள்ளனர்.

ஜெயந்தி மீது போட்டி வேட்பாளர் புகார்

இதற்கிடையே, ஜெயந்தி தங்கபாலு மீது தேர்தல் அதிகாரிகளிடம் போட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயிலை சிவகாமி புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தன் மீது கிரிமினல் வழக்கு ஒன்று நிலவையில் இருப்பதை தனது வேட்பு மனுவில் ஜெயந்தி தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.அதேபோல தனது குடும்பத்தின் மெகா டிவியின் நிர்வாக இயக்குநராக இருப்பதையும் தெரிவிக்காமல் அவர் மறுத்து விட்டார் என்று சிவகாமி கூறியுள்ளார்.

அதிகாரிகளுக்கும்,அரசியல் கட்சித்தலைமைக்கும் தொண்டர்களுக்கும்,பெப்பே காட்டிவிட்டு,சர்வசாதாரணமாக நடந்து கொள்ளும்..,சகுனிக்கே சவால் விடும் அரசியல்வாதிகளை,சுதந்திரம் பெற்றதிலிருருந்து எவ்வளவோ பார்த்துட்டோம்..,இதனையும் பார்த்துத் தொலைப்போம்..!.
   வாழ்க ஜனநாயகம்..-பணம் இருப்பவர்களுக்கு மட்டும்-

 

அரசியல்வாதிகளிடமிருந்து மது, பிரியாணி வாங்காதீங்க: நரேஷ்குப்தா வேண்டுகோள்





அரசியல்வாதிகள் மது பாட்டில், பிரியாணி தர வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கவும் கூடாது, அவர்கள் கொடுத்தாலும் வாங்கவும் கூடாது என்று தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

காந்திய அறக்கட்டளை மற்றும் காந்திய நிறுவன அமைப்புகள் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தின. இந்த பேரணி நேற்று காலை சென்னை காந்தி சிலையில் இருந்து துவங்கியது. இதற்கு தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமை வகித்தார்.

இதில் மகாத்மா காந்தியிடம் 5 ஆண்டுகள் தனி செயலாளராக பணியாற்றிய கல்யாணம், காந்திய நிறுவன அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பி.மாருதி, சி.வி.டி.ராகவலு, டி.கே. ஓசா, அம்புரோஸ், ஜான்தன்ராஜ், வழக்கறிஞர் பால சீனிவாசன், தமிழ்நாடு குடிசைவாழ் பெருமன்ற தலைவர் நேருதாசன், அமராவதி நதிநீர் பாசன இயக்கத்தின் பொதுச்செயலாளர் லிங்கம் சின்னசாமி, மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணியின்போது தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு கொடுக்கப்பட்டன.

பேரணி முடிந்ததும் நரேஷ்குப்தா கூறியதாவது,

அரசியல் வாதிகள் மது பாட்டில், பிரியாணி தர வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கவும் கூடாது, அவர்கள் கொடுத்தாலும் வாங்கவும் கூடாது. வேட்பாளர்கள் மது பாட்டில்களோ, பிரியாணியோ கொடுக்கக்கூடாது.

அரசியல்வாதிகள் பிரசாரம் செய்கையில் கொள்கை முடிவுகளைப் பற்றித்தான் பேச வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது.

அனைவரும் ஓட்டுபோடுவது புனிதமான கடமை என்று முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்கிறார். எனவே அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும்.

விமான நிலையத்திற்கு சென்றால் சோதனை செய்வதுபோல தான் தற்போது தேர்தல் அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்கிறார்கள்.

தகுந்த ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது இல்லை. உரிய ஆவணங்கள் இன்றி பெரிய தொகையை எடுத்துச்சென்றால், கட்டாயம் அந்த பணம் எப்படி வந்தது என்று விசாரணை நடத்தியாக வேண்டும். இதில் ஒன்றும் தவறு இல்லை. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு ஏராளமான பணம் கொடுக்கிறார்கள். ஆகவே வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதில் எந்த தவறும் இல்லை என்றார்.

Thursday, 24 March 2011

இலவசம் ...இலவசம் ...இலவசம் ...

தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் மீண்டும் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதை, அவர்களது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் ஆரவாரமாக கை தட்டி வரவேற்கலாம். ஆனால், மாநில முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் நடுநிலையாளர்களை, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை இலவசங்கள், ரொம்பவே வேதனைப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள, 19 லட்சம் பரம ஏழைக் குடும்பங்களுக்கு, மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு, உறுத்தலாக உள்ளது. இந்த இலவச அரிசித் திட்ட அறிக்கையை முதல்வர் வாசித்ததும், கட்சிக்காரர்கள் அனைவரும், ஆர்ப்பரித்து, கைதட்டி வரவேற்றனர். தான் ஆறாவது முறையாக முதல்வராக வரப்போகும் நிலையிலும், தமிழகத்தில் 19 லட்சம் ஏழை, அதுவும் பரம ஏழைக் குடும்பங்கள் இருப்பது, ரத்தக் கண்ணீரை வர வழைக்கிறது என, அந்த அறிக்கையோடு சேர்த்து, முதல்வர் கூறியிருக்கலாம். பரம ஏழைக் குடும்பங்களுக்கு, வெறும் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா? அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே! இன்று, மாவட்டச் செயலர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக உள்ளது, முதல்வருக்கு தெரியாமல் இல்லை. பரம ஏழைக் கிராமங்களை, தலைக்கு ஐந்து கிராமங்கள் என தத்தெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பாடுபடுவோம் என அறிவித்திருந்தால், அவரது கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, மக்கள் அனைவருமே வரவேற்றிருப்பர். அதைவிடுத்து, 35 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்பது என்பது எல்லாம், "பரம ஏழைகளே... பரவிக் கொண்டே இருங்கள்' என்பது போல் உள்ளது. "ஏழைகளின் தோழன், பாட்டாளிகளின் பங்காளி' எனச் சொல்லி, கோடீஸ்வரர்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆளப்போகின்றனரோ... பாவம் ஏழைகள்!


--  நன்றி  எம்.முகமது அனீஸ், ராமநாதபுரம்  தினமலர் நாளிதழ் ---


Wednesday, 23 March 2011

சரத்குமார் - தமாஷ் பேட்டி.

மதிமுக விலகியதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: 
 சரத்குமார்-           தமாஷ் பேட்டி.

அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதால் எந்த பாதிப்பும் வராது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் அக்கட்சியின் தென்காசி தொகுதி வேட்பாளருமான நடிகர் சரத்குமார் கூறினார்.

நேற்று பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கி பேசியதாவது,
தமிழகத்தில் அதிமுக சார்பில் அமைந்துள்ள கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள் கொடுத்தஜெயலிலாதவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சரத்குமார சினிமாவில் நடிப்பாரே, தொகுதியில் இருப்பாரா, இல்லை வெற்றி பெற்று விட்டு தொகுதியை விட்டு சென்று விடுவாரா என்ற எதிர்தரப்பு கேள்விக்கு முதலில் நான் பதில் கூறுகிறேன்.

தென்காசி சட்டசபை தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு ஜாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் பயன்படும் விதமாக 24 மணி நேரமும் செயல்படகூடிய தனிசெல் தொலைபேசி எண் இயங்கும். அந்த எண்ணில் நீங்கள் தொடர்பு கொண்டால் உங்களுக்கான எந்த பிரச்சனைக்கும் உங்களோடு நின்று வெற்றிகரமாக முடித்துத் தருவேன்.

உறதியாகவும், நிச்சயமாகவும் சொல்லிக் கொள்கிறேன், நான் வாரத்தில் நான்கு நாட்கள் தென்காசி தொகுதியில் தங்கியிருப்பேன். இந்க தொகுதியை தமிழகத்தின் சிறந்த தொகுதியாகவும், தொழில்வளம்,கல்வி வளம் நிறைந்த தொகுதியாகவும் அனைவரும் பாராட்டு விதத்தில் மாற்றிகாட்டுவேன்.

தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் கருணாநிதியின் குடும்ப ஆட்சியையும், ஊழலையும், மணல் கொள்ளை ஆட்சியையும் கூண்டோடு ஓழித்து ஜெயலலிதாவின் தலைமையில் நல்லாட்சி அமைத்திட அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.

சரத்குமார் பாவூர்சத்திரம் வந்தபோது அவருடைய மனைவி ராதிகாவும் வந்திருந்தார்.

பின்னர் இரவு 11.30 மணிக்கு ஐந்தருவி இசக்கி ரிசர்ட்டில் நிருபர்களுக்கு சரத்குமார் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், தேர்தல் வாக்குறுதிகளாக இலவச பொருட்களை அறிவித்துள்ளனர். தொடர்ந்து இலவசம் என்று அறிவித்து வருகின்றனர். இதனை நம்பி மககள் வாககளித்து ஏமாற மாட்டார்கள். ஓட்டு வங்கியை குறிவைத்து அரசியலை நடத்தி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

லஞ்சம் கொடுப்பதற்கு சமம்தான் இலவசங்களை தருவதாக அறிவிப்பது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் சிலர் அக்கட்சியின் பெயரை கள்ங்கப்படுத்தி வருகின்றனர். எங்கே இருக்கிறது அந்தக் கட்சி. அந்த கட்சி அனுமதி பெற்ற கட்சியா....தேர்தலில் வெற்றி தோல்வி என்பது ஜனநாயக முறை. அதை விடுத்து அவமானம் ஏற்படுத்த துடிப்பது நாகரீகம் அல்ல. அவர்கள் போட்டியிடும் சின்னத்தில்,தொகுதியில் வெற்றி பெறட்டு்ம். அதை விடுத்து என்னை தோற்கடிப்பேன், என்று மல்லுகட்டுகின்றனர். யாராக இருந்தாலும் முதுகில் குத்தாமல் நேருக்கு நேர் மோதி பார்க்கட்டும். அதுதான் வீரனுக்கு அழகு.

தொன்காசி தொகுதியில் 4 நாள் தங்கியிருந்து பணியாற்றுவேன். ச.ம.க. 3 மாதத்துக்கு முன்பே சர்வதிகார ஆட்சியை அகற்றிட வேண்டும் என்ற முடிவோடு கொள்கை,கூட்டணி பற்றி அறிவித்தது. அப்படிதான் தற்போது கூட்டணி அமைந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதால் எங்கள் அணிக்கு எந்த பாதிப்பும் வராது என்றார் சரத்குமார்.

வீங்கிய, அமைச்சர் வேலுவின் சொத்து....





 5 ஆண்டுகளில் 780 மடங்கு வீங்கிய அமைச்சர் வேலுவின் சொத்து

அமைச்சர் எ.வ.வேலுவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 780 மடங்கு அதிகரித்துள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

தேர்தலின்போதுதான் ஒவ்வொருவரின் சொத்து விவரமும் மக்களுக்குத் தெரிய வரும். அவர்கள் தாக்கல் செய்யும் சொத்துக் கணக்குகளைப் பார்க்கும் மக்களுக்கு வியப்பு வியப்பாய் வரும். காரணம், அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள்.

வழக்கமாக சொகுசுக் கார்களில் வலம் வரும், சட்டை கசங்காமல் உலா வரும் பல தலைவர்களும், வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் சொத்துப் பட்டியலில் படு ஏழையாய் காட்சியளிப்பார்கள்.

கையில் காசு கூட இல்லை என்பார்கள், கார் இல்லை என்பார்கள், பைக் இல்லை என்பார்கள், நிலம் இல்லை என்பார்கள். அப்படியே இருப்பதாக கூறினாலும் மனைவி பெயரிலோ, அல்லது பிள்ளைகள் பெயரிலோ இருப்பதாக கணக்கு காட்டியிருப்பார்கள்.

இந்த நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேலுவின் சொத்து மதிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம் அவரது சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 780 மடங்கு உயர்ந்து ஓங்கி நிற்பதுதான்.
திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறார் வேலு. கடந்த 2006 சட்டசபைத் தேர்தலின்போது தனது சொத்து மதிப்பு வெறும் ரூ. 1 லட்சம் என்று மட்டுமே காட்டியிருந்தார் வேலு. ஆனால் தற்போது இவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

இவரது பெயரில் வங்கி கணக்கில் மட்டும் ரூ. 17 லட்சம் உள்ளது. விவசாய நிலத்தின் மதிப்பு ரூ. 1.75.Nfhb என்று காட்டியுள்ளார். வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களின் மதிப்பு ரூ. 1.25 கோடி என்று கூறியுள்ளார். மனைவியின் நகைகளின் மதிப்பு ரூ. 5.76 லட்சம் என்று காட்டியுள்ளார்.

 [dehaf  gp]pd]py; ,t;tsT rjtPjk; yhgk; tUk; vd;gjhy;jhd;>Ntl;ghsh; rPl;Lf;F ,t;tsT Nghl;bah..>? ke;jpupfshdth;fs; gpioj;Jf; nfhs;fpd;wdh;.kd;dh;fs;jhd; ghtk;..!

பன்றிகளின் முன்னால் முத்தைச் சிதற விடாதேயுங்கள்;


" பன்றிகளின் முன்னால் முத்தைச் சிதற விடாதேயுங்கள்;
பரிசுத்தமானதை பாவிக்குக் கொடாதேயுங்கள் "
-நாஞ்சில் சம்பத்
( ம.தி.மு.க., கொள்கை விளக்க அணிச் செயலாளர் )


ஏப்ரல் திங்களில் தமிழகம் சட்டமன்றத்திற்கான தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.

நாட்டு மக்களின் கண்ணீரையும் ரத்தத்தையும் காவுகேட்டு மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்து தன்னையும் பல்கி பெருக்கிக் கிடக்கும் தனது குடும்பதையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிற ஒரு அபூர்வப் பிறவி ஆறாவது முறையாகவும் அன்னைத் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர, அதற்கான அடிப்படை வேலைகளில் ஆளும் தரப்பினர் இப்போதே ஈடுபடத் துவங்கியுள்ளனர். கொள்ளையடித்துக் குவித்து வைத்திக்கிற கோடிப் பணங்களைக் கொட்டிச் செலவழித்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கி தமிழ்நாட்டைத் தன் குடும்பத்தின் வேட்டைக்காடாகத் துடிக்கிற சுயநலச் சுனாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும். வரும் தேர்தலில் குலத் துரோகம் செய்கிற இந்தக் குடும்பத்தை தமிழக வாக்காளர்கள் ஓரங்கட்டாவிட்டால் தமிழகம் சாரம் இழக்கும். சத்தியிழக்கும் வருங்காலச் சந்ததி வாழ்விழக்கும் தமிழ்க் குடும்பங்கள் தத்தளிக்கும் தடுமாறும். ஒரு குடும்பம் ஓகோ என்றிருக்கும். ஆகா நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று நாளெல்லாம் கண்ணீர் வடிக்க வேண்டியது வரும். கவலைப்பட வேண்டியது வரும்.

அதிகாரத்திற்கு வருகிறவர்களுக்கு அந்த நாளில் அண்ணல் காந்தியடிகள் சொன்ன அறிவுரையை இந்த நாளில் நினைவு படுத்துவோம். ஏழ்மையை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காகவே இந்தப் பதவிகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை மறவாமல் செயற்படுங்கள்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தான் ஒரு அரசாங்கம் இயங்குகிறது என்பதை அண்ணா அவர்கள் மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையில் தெளிவுபடுத்தினார். முழுவயிறு காணாதார் முதுகெலும்பு முறிய பாடுபடுவோர், வாழ்வின் சுவைகாணார், வலியோரின் பகடைக் காய்கள், ஓடப்பர் - இவரெல்லாம் தருகின்ற வரிப்பணம்தான் கோட்டையாக் கொடிமரமாய் பாதையாய் பகட்டுகளாய் அமல் நடத்தும் அதிகாரிகளாய் அறிவு பெற அமையும் கூட்டங்களாய் அமைகின்றனஎன்றார் அறிஞர் அண்ணா. அண்ணல் காந்தியடிகளின் அறிவுரையும், அறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலையும் இன்றைய ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டு இருந்தால் நாடு நாடாக இருந்திருக்கும். காடாக மாறியிருக்காது கவலை மிகுந்திருக்காது.

வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் செய்தார்கள். அரசியல் செய்ய வந்தவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்றார் கவிஞர் வைரமுத்து. யாரை மனதில் வைத்து இப்படி எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் ஆதாயச் சூதாடிகளால் இன்று அரசியல் வியாபாரம் ஆகி விட்டது. விதியற்றவர்களாய், கதியற்றவர்களாய் மக்கள். இந்த மதோன்மத்தர்களின் கோரப்பிடியில் இருந்து நாட்டை மீட்க வாக்குச்சீட்டு என்ற ஆயுதத்தை ஏந்த மக்கள் அணியமாக வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

ஒரு கிண்ணத்தில் மட்டுமே அமுதம் நிரம்பி வழிகிறது. ஒரு தோட்டத்தில் மட்டுமே தென்றல் காற்று திரும்பத்திரும்ப வீசுகிறது. ஒரு நத்தவனத்தில் மட்டுமே மலர்கள் மலர்ந்து சிரிக்கின்றன. ஒரு கருணை இல்லாத குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் மந்தகாசப் புன்னகையில் மல்லாந்து கிடக்கிறது.

ஒரு குடும்ப ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எதிராக குவலயத்தில் அங்கிங்கெனாதபடி புரட்சிகள் சூல்கொண்டு வருகின்றன. நைல் நதிக்கரையில். நாகரீகத்தின் தொட்டில் பூமியில், பிரமிடுகளின் தேசத்தில், அய்யாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னால் ரோம சாம்ராஜ்யத்திற்கு தானியங்கள் வழங்கிய வளமார்ந்த பூமியில் நாசரின் எகிப்தில் முப்பது ஆண்டுகாலம் எகிப்து மக்களை ஏய்த்து, ஏமாற்றி, உண்டு கொழுத்து, உல்லாசம் அனுபவித்து, ஊரெல்லாம் வளைத்துப்போட்ட ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் வெசுவியஸ் எரிமலையாய் வெடிக்கிறார்கள் ஊடகத்தில் ஹோஸ்னி முபாரக்கின் அத்துமீறலை அம்பலப்படுத்திய காலித் சையத் என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டான்.

காலித் சையத்தின் மரணம் எகிப்து மக்களின் நெஞ்சத்தில் ரணத்தை உருவாக்கியது. அது போர்குணமாக உருவெடுத்தது புகழ்பெற்ற தாரீர் சதுக்கத்தில் இருபது லட்சம் மக்கள் பதினெட்டு நாட்கள் திரண்டார்கள். நாயே நாட்டைவிட்டு வெளியேறு என்று திசையதிர மூரி முழங்கினார்கள். மக்களின் உள்ளத்தில் பொங்கியெழுந்த கோபத்திற்கு ஈடு கொடுக்க முடியாத ஹோஸ்னி முபாரக் குடும்பத்தோடு கெய்ரோவில் இருந்து வெளியேறி விட்டான். எகிப்தில் நின்று நிலவிய ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. மக்களின் விழாவிற்கு விடை கிடைத்தது.

எகிப்தில் புரட்சி வெடித்ததற்கும் ஹோஸ்னி முபாரக் வெளியேறியதற்கும் டுனீசியாவில் ஏற்பட்ட புரட்சி தான் காரணமாக அமைந்தது. 72 வயது நிரம்பிய டுனீசியாவின் அதிபர் பெண் அலியின் ஆட்சியில் டுனீசியாவில் நொந்தார்கள். நொறுங்கிப் போனார்கள். மக்கள் அதலபாதாளத்தில் தூக்கி வீசப்பட்டார்கள். பெண் அலியின் குடும்பமோ ஆகாயத்தையே வசமாக்கிவிட்டது. டுனீசியாவிலும் புரட்சி பூத்தது. புதுமை சிலிர்த்தது. கொற்றத்தில் இருந்த கொடியவன் பெண் அலிக்கு எதிராக முகமதுவுவாசி என்ற இளைஞன் தற்கொ¬லை செய்து மாண்டான். அந்த இளைஞனின் சாவுதான் பெண் அலியின் ஆட்சியைக் காவு கேட்டது. டுனீசியாவில் இருந்து பெண் அலியும் வெளியேறி விட்டான் குடும்பத்துடன்.

பனாமாவில் இப்போது சலேவிற்கு எதிராக புரட்சி வெடித்து விட்டது. சலேவும் தாக்குப்பிடிக்க மாட்டான். அவன் ஆட்சியும் தரைமட்டமாகிவிடும் என்ற செய்திகள் காதில் தோனாய்ப் பாய்கிறது.

விடுதலை உணர்ச்சிக்கு வித்தூன்றிய மாமனிதன் உமர் முக்தார் உலவிய லிபியாவிலும் மக்கள் கிளர்ச்சிக் கொழுந்து விட்டு எரிகிறது. கடாபிக்கு எதிராக மக்கள் களத்திற்கு வந்து விட்டார்கள். லிபியாவின் தலைநகர் டிரிபோலி போர்க்களமாக விட்டது. கடாபிக்கு எதிராக மக்கள் செங்குருதி சிந்த சித்தமாகி விட்டார்கள். பெங்காசி நகரம் புரட்சியாளர்கள் வசமாகி விட்டது. பொது மக்கள் காங்கிரஸ் எனும் லிபியாவின் பார்லிமெண்ட் தீக்கரையாக்கப்பட்டு விட்டது. பல நகரங்களில் அரசு அலுவலகங்கள் தீயில் தீர்ந்து கொண்டிருக்கின்றன. பெங்காசி விமானப் படைத்தளத்தைப் புரட்சியார்கள் உடைத்து நொறுக்கி விட்டார்கள். தலைநகர் டிரிபோலியில் உள்ள விமான நிலையமும் புரட்சியாளர்களால் இழுத்து மூடப்பட்டுவிட்டது. சிட்ரோ, டொப்ருக், மிஸ்ரட்டா, கோம்ஸ், டர்கவுனா, ஜென்டன், அல்ஜாவியா, ஜவாரா போன்ற இடங்களில் எல்லாம் கலகக்காரர்கள் களமிறங்கி விட்டார்கள். புரட்சியாளர்கள் மீதும் தாயகத்து மண்மீதும் கொடுங்கோலன் இராஜபட்சேயைப் போல ஏவுகணைத் தாக்குதலுக்கு இராணுவத்தை ஏவி விட்ட பிறகும் புரட்சித் தீ எல்லாத் திசைக்கும் பரவுவதாக செய்திகள் வருகிறது. முட்டாள் கடாபியும் லிபியாவை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஐ.நாவின் மனித உரிமைப்பிரிவின் தலைவன் நவிபிள்ளை கடாபியின் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்கிற அளவிற்குக் கடாபியின் நிலைமை கவலைக்கிடமாகி விட்டது.

மத்திய கிழக்கில் வளம் நிறைந்த பக்ரைனிலும் புரட்சி பூத்துக் கிடக்கிறது. பக்ரைன் தலைநகர் மனாமாவின் பேர்ள்சதுக்கத்தில் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் மன்னராட்சிக்கு எதிராக மண்ணும் விண்ணும் அதிர அன்றாடம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

மன்னராட்சி காலூன்றி இருக்கிற அரபுச் சீமையில் மக்கள் புரட்சி வெல்லுமானால் மக்களாட்சித் தத்துவம் மலர்குலுங்கும் மண்ணில் புரட்சி வெடிக்க அதிக நேரமாகாது. அதற்கான தருணம்தான் வருகிற பொதுத் தேர்தல் இந்தத் தேர்தலின் முடிவில் மாறுதலும் சாத்தியாகும். மக்களுக்கு ஆறுதலும் சாத்தியமாகும்.

தொலை நோக்குப் பார்வையைத் தொலைத்துவிட்டு வளமான எதிர்காலத்திற்கு வழி காணாமல் நிகழ்காலத்தின் கதவடைக்கிற கருணாநிதியின் காலம் தமிழக வரலாற்றில் கசப்பான காலம் களப்பிரர் காலத்தைத் தான் நினைவு படுத்துகிறது. நெஞ்சு சுடுகிறது.

மக்களுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்காமல் மீனைக் கொடுத்து மக்களை ஏய்க்கிற இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து மக்களை ஏய்க்கவும் ஏமாற்றவும் திட்டமிடுகிறார்கள். மலைவாசியும் தொட முடியாத தூரத்தில் விலைவாசி. இதை நீ யோசி என்று சொன்னால் மக்களுக்கு வாங்கும் சக்தி வந்து விட்டது என்று முதலமைச்சர் பிலாக்கணம் பாடுகிறார். தன்மக்களைச் சொல்கிறாரா? தமிழ்நாட்டு மக்களைச் சொல்லுகிறாரா? என்பது தான் தெரியவில்லை.

ஜனநாயக பண்புக்குப் பந்தி வைக்க குடவோலை முறைகண்ட பழந்தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியில் ஜனநாயகம் கட்சியிலும் ஆட்சியிலும் சிரச்சேதம் செய்யப்பட்டு விட்டது. கட்சியின் பொருளாளர், துணைமுதல்வர் என்னும் இடத்திற்கு ஸ்டாலினைக் கொண்டு வந்த பிறகும் இளைஞரணிச் செயலாளர் பதவிக்கு இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்கக் கருணாநிதிக்கும் மனமில்லை. ஸ்டாலினுக்கும் குணமில்லை. தடாலடி அரசியல் நடத்துகிற கருணாநிதிக்கு மகனாகப் பிறந்தார். என்பதை விட வேறு எந்த எந்தத் தகுதியும் இல்லாத அழகிரியை மத்திய மந்திரியாக்கிய அவலத்தை எங்கேபோய் சொல்வது அறிஞர் அண்ணாவும் அவர்தம்பி வைகோவும் அலங்கரித்த மாநிலங்களவையில் கனிமொழியை உட்கார வைத்ததன் மூலம் மாநிலங்கள் அவையே அழுக்காகிவிட்டது. கருணாநிதி குடும்பத்தைச் சார்ந்த ஆறுக்கும் மேற்பட்ட அதிகாரமையங்கள் தமிழகத்தைக் கயிறு போட்டுத்தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு மலிவான, மலினமான, கீழ்த்தரமான, கேவலமான, கோரமான குடும்ப ஆட்சியைக் குவலயத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது. இவர்களை இன்னும் ஏன் இந்த மண்ணில் ஆள அனுமதிக்க வேண்டும் என்கிற கேள்வி தமிழக வாக்களார் மத்தியில் இன்று எழுந்து விட்டது. உண்மையைக்கண்டு உள்ளுக்குள் ஒடுங்கிவிடாமல் ஊரெல்லாம் மக்கள் சீறியெழத் தொடங்கிவிட்டார்கள். அச்சமும் பேழமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற்கொண்ட ஊமை ஜனங்கள் தான் தமிழ் நாட்டு மக்கள் எனக் கருணாநிதி கணக்கிடுவாரேயானால் கருணாநிதியின் கணக்கை முடிக்க மக்கள் கணின்று எழுந்த விட்டார்கள் என்பதை போகப் போகப் புரிந்து கொள்வார்கள் ஆட்சியாளர்கள்.

ஒளி மிகுந்த தமிழகத்தை இருட்டில் தள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுதொழில் குறுதொழிலுக்குக் கொள்ளி வைத்த ஆட்சிதான் கருணாநிதி ஆட்சி. வீட்டுக்கு ஒரு குடிகாரணை உற்பத்திசெய்து தாயின் கையில் 1 ரூபாய்க்கு அரிசியையும் தகப்பன் கையில் ரூ.100/- சாராயத்தையும் கொடுத்தது சாதனையா? வேதனையா?

பாதுகாப்பு வளையத்துக்குள் பத்திரமாக இருந்து ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளரையே அவர் வீட்டு வாசலில் வெட்டிக் கொல்லுகிறார்கள் என்றால் உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது உயர்நீதிமன்ற நீதியரசர்களும் இந்த நீசனின் ஆட்சியில் தாக்கப்படுகிறார்கள் என்றால் ஆழ்வார்க்குறிச்சியில் பட்டப்பகலில் மந்திரிகள் முன்னிலையிலேயே சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள் என்றால் காலையில் பட்டாம் பூச்சி போல் பள்ளிக்குப் பறந்து சென்ற குழந்தை மாலையில் வீடு திரும்புவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்றால் இந்தியாவில் இதைவிட இழிவான கேடு கெட்ட ஆட்சி வேறெங்கும் இல்லை.

ஆளப்படுகிற மக்கள் வசதியாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் வீட்டில் வசந்தம் கோலம்போட வேண்டும் என்றால் ஆளுகிறவன் ஏழையாக இருக்க வேண்டும். இங்கே ஆளப்படுகிற இலவசத்திற்குக் காத்திருக்கிற யாசகர்கள் ஆளுகிறவர்கள் என்ஜினியர்கள் கல்லூரி தாளாளர்கள். மேலாளர் நாகரிகம் நிலவிய நாட்டில் இப்போது தாளாளர் நாகரிகம் தலைதூக்கி விட்டது.

இனப்படுகொலை நிகழ்த்திய இந்திய எஜமானியின் காலில் விழுந்து கிடக்கும் இந்த அடிமைக் கூட்டத்தை, அலைவரிசையில் தன் கைவரிசையைக் காட்டி தேசப்பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஆபத்தான மனிதர்களை, பட்டப்பகலையே பட்டாபோடும் இந்த பகல் கொள்ளையர்களை, வலிக்காமலேயே ரத்தம் உறிஞ்சுகிற இந்த நவீனரக ஓட்டுண்ணிகளை, பண்பாட்டு அடித்தளத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தைத் தொடுத்திருக்கிற குலக்கேடர்களை வேரோடும் தூரோடும் வெட்டிச் சாய்க்கிற வேள்வியில் வெற்றி பெற்றால் தான் நாடு நாடாக இருக்கும்.

ஜனநாயக தேவதையின் துகிலுரிந்த இந்த நவீன துச்சாதனர்களின் இருந்து, 1,01,541/- கோடிக்கடன் வாங்கி நிர்வாகத்தை நிர்வாணமாக்கிய விவேகம் கெட்டவர்களிடம் இருந்து, தீர்ந்து போகாத திராவிட இயக்க இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கத் துடிக்கும் கொள்கைத் துரோகிகளிடம் இருந்து, வாரிசு அரசியல் என்னும் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்ட மரபார்ந்த தமிழகத்தின் பெருமையை மீட்டெடுப்பதற்கு தமிழர்களே தயாராகுங்கள். தாமதித்தால் எதுவும் நேராமலும் போகலாம். நல்ல நேரமிது நழுவ விடாதீர்கள்.