தனது வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததில் எந்தத் தவறும் இல்லை. மக்களைப் பொறுத்தவரை இது ஒரு மேட்டரே இல்லை, என்று கூறியுள்ளார் அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான சோ.
தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை, மக்கள் முன்னிலையில் சரமாரியாக விஜயகாந்த் அடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக விஜயகாந்துக்கெதிரான கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் பல கட்சித் தலைவர்களும். ஆனால் விஜயகாந்தோ, என் ஆளைத்தானே அடிச்சேன். உங்களுக்கென்ன வந்தது... என்கிட்ட அடிவாங்கினவன் மகாராஜனாய் வருவான், என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் கருத்து கேட்கப்பட்டது. விஜயகாந்தை போயஸ் தோட்டம் பக்கம் கொண்டு போய் சேர்த்ததில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால், சோ கருத்தையும் கேட்க ஆவலாக இருந்தனர் பத்திரிகையாளர்கள்.
இதுகுறித்து அவர் கருத்து கூறுகையில், "எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க", என்றார்.
இதைக் கேட்ட திமுக கூட்டணியினர், 'இதே தவறை திமுக தலைவர்கள் யாராவது செய்திருந்தால், சோ இதே கருத்தைத்தான் சொல்லியிருப்பாரா?' என்று திருப்பிக் கேட்கின்றனர். கேள்வி நியாயம்தானே!
" தனது வேட்பாளரையே விஜயகாந்த் அடித்ததெல்லாம் ஒரு மேட்டரேயில்லை-இது சோவின் கருத்து.!
அவ்வளவு ஈஸியாக இந்த மேட்டரை சோ.எடுத்துக் கொள்வது போலவேதான்
கூட்டணித்தலைவர்களை கேட்காமலே 160 இடங்களை தன்னிச்சையாகவே ஜெ.அறிவித்ததும் ஒரு மேட்டரேயில்லை..,
தாமஸ் நியமனம் குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என்று பிரதமர் சொன்னதும் ஒரு மேட்டரேயில்லை..
கலைஞர் மற்றும் ஜெயலலிதா அறிவித்த எதிர்கால லஞ்சமான இலவசத் திட்டங்கள் எல்லாம் ஒரு மேட்டரேயில்லை..,
எல்லாவற்றுக்கும் மேலாக..ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஒரு மேட்டரேயில்லை..
விடுங்க மக்களே..பேனா இருக்கிறவன் எழுதறான்..,வாயிருக்கிறவன் பேசுறான்..மப்பு ஏறுனவன் அடிக்கிறான்.பணம் கட்டி சீட்டு வாங்கினவன் அடி வாங்குகிறான். இதெல்லாம் ஒரு மேட்டரேயில்லை..,"

இதுவே வேறு ஒரு அணியில் நடந்திருத்தால் இந்த பிராமணன் என்னவெல்லாம் எழுவான், பேசுவான் என்று எண்ணிபார்கவேண்டும். இவர்களை நாட்டில் விட்டு வைப்பதே தேச துரோகம்தான்.
ReplyDelete