வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு நிறைவேற்றுவார் கருணாநிதி-ஈவிகேஎஸ்
தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு நிறைவேற்றுவார் முதல்வர் கருணாநிதி என்று மூத்த காங்கிரஸ்
தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
ஈரோட்டில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வ.உ.சி. மைதானத்தில் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன் கூறுகையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் மிகச்சிறந்த திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் எல்லாம் நூற்றுக்கு நூறு நிறைவேற்றப்படும். கடந்த திமுக ஆட்சியில் கருணாநிதி சொன்னதை அப்படியே நிறைவேற்றி வெற்றிகொடி நாட்டி இருக்கிறார். சென்ற தேர்தல் அறிக்கையின்போது ஏழைகளுக்கு இலவச கலர் டெலிவிஷன் வழங்கப்படும் என்று சொன்னபோது நானும், ப.சிதம்பரமும் சாத்தியம் இல்லை என்று பேசிகொண்டோம். பின்னர் பொருளாதார மேதையான சிதம்பரம் இரவு முழுவதும் யோசித்து விட்டு சாத்தியம் என்றார்.
கலைஞர் சிறந்த எழுத்தாளர். அரசியல்வாதிகளில் எல்லாம் மிகச்சிறந்த அரசியல்வாதி. கடுமையான உழைப்பாளி. சிறந்த பொருளாதார நிபுணர். கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னபடி விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ ரேசன் அரிசி வழங்கினார். இப்போது மாணவர்களுக்கு லேப்- டாப் தருவேன் என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எல்லாம் இலவசம் என்று சிவப்பு சட்டைக்கார்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஆனால் கல்கத்தாவில் ஒரு ரூபாய்கு ஒரு கிலோ அரிசி தருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள். இந்த ஆட்சியில் நல்ல பல காரியங்கள் தொடர வேண்டும்.எனவே திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் எனறார்.
antha paldi, anthar paldi, nakkilay narampillatha arasiyalvathi No.1 Elangovan, the Great Warrior....
ReplyDelete